பரபரப்பாக சென்றுகொண்டிருந்த பிக் பாஸ் 8ம் சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. அந்த ஷோவின் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே முத்துக்குமரன் தான் டைட்டில் ஜெயித்தார்.
முத்துவுக்கு பரிசு தொகையாக 40.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முந்தைய 7ம் சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு பரிசாக 50 லட்சம் மட்டுமின்றி ஒரு சொகுசு கார் என பல பரிசுகள் தரப்பட்டது. ஆனால் இந்த வருடம் ஸ்பான்சர்கள் யாரும் வெற்றி பெற்றவருக்கு பரிசு கொடுக்கவில்லை.
நண்பர்களுக்கு உதவி
முத்து பிக் பாஸில் ஜெயித்த பணத்தை கொண்டு தனது இரண்டு நெருக்கமான நண்பர்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்வேன் என மேடையில் கூறி இருக்கிறார்.
நண்பர்களுக்கு உதவ நினைக்கும் முத்துவின் எண்ணத்தை தற்போது நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.