Home சினிமா எலிமினேஷன் Unfair.. வெளியில் வந்த பின் நடிகர் பிரஜின் காட்டமாக வெளியிட்ட முதல் வீடியோ

எலிமினேஷன் Unfair.. வெளியில் வந்த பின் நடிகர் பிரஜின் காட்டமாக வெளியிட்ட முதல் வீடியோ

0

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பிரஜின் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட நிலையில் திடீரென எலிமினேட் ஆனது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

பிரஜின் மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா இருவரும் ஜோடியாக தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்தன்ர். பிரஜின் வெளியேறியதால் சாண்ட்ரா கண்ணீர் விட்டு கதறியது குறிப்பிடத்தக்கது.

காட்டமான வீடியோ

இந்நிலையில் தனது எலிமினேஷன் ஏதிர்பார்காத ஒன்று என பிரஜின் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கூறி இருக்கிறார். இது Unfair என பலரும் தனக்கு மெசேஜ் செய்கிறார்கள் எனவும், ஆனால் இதை பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை என பிரஜின் கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் ஷோ என்றாலே ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறி இருக்கும் பிரஜின், தனக்கு ஓட்டு போட்டு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் நன்றி என வீடியோவில் கூறியுள்ளார்.
  

NO COMMENTS

Exit mobile version