Home சினிமா காதலியுடன் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனியின் திருமணம் எப்போது? பணம் தான் பிரச்சையா

காதலியுடன் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனியின் திருமணம் எப்போது? பணம் தான் பிரச்சையா

0

பிரதீப் ஆண்டனி

அருவி படத்தில் துணை கதாபாத்திர நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி. இவர் மக்கள் கொண்டாடும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டவர். இவருடைய தைரியமான பேச்சால் ரசிகர்களை சம்பாதித்தார்.

இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், இவரை ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விட்டனர். இதற்கு பலர் பிக் பாஸ் வீட்டிலும், வெளியிலும் எதிர்ப்பு தெரிவித்து பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக பேசி வந்தனர்.

கணவரின் படத்தை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்.. காரணம் ஷாருக்கான் உடன் ஜோடியாக நடிக்கவிருந்தது தானா

திருமணம்

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிரதீப் தனது நீண்ட நாள் காதலியுடன் நிச்சயம் செய்து கொண்டு அந்த புகைப்படங்களை அவரது சமூகவலைத் தளத்தில் பதிவிட்டு அதற்கு கீழ் எனக்கெல்லாம் திருமணம் நடக்காது என்று நினைத்து கொண்டு இருந்தேன் பரவாயில்லை என்னை நம்பியும் பொண்ணு கொடுத்துவிட்டார்கள் என்று ஜாலியாக பதிவு செய்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பே பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயமான நிலையில் இன்னும் திருமணம் தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதை பற்றி அனைவரும் கேட்டு கொண்டே இருந்தனர். இதற்கு பதில் அளித்த பிரதீப் நான் காசு சேர்த்து வைத்த பிறகு தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்றும், அந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன் என்றும் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version