பிக்பாஸ் 8
தமிழ் சின்னத்திரையில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் பக்கம் வந்த பிக்பாஸ் அப்படியே தென்னிந்திய சினிமாவிற்கு பல வருடங்களுக்கு முன் வந்தது.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து அப்படியே நிறைய சீசன்கள் ஒளிபரப்பாக விரைவில் 8வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் 8வது சீசன் குறித்து சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
போட்டியாளர்கள் லிஸ்ட்
தற்போது களைகட்ட போகும் 8வது சீசன் போட்டியாளர்கள் குறித்த தகவல் தான் வலம் வருகிறது. போட்டியாளர்களின் ஆடிஷன் இப்போது நடந்து வருகிறதாம்.
அப்படி 8வது சீசனில் வரப்போகும் பிரபலங்கள் என வலம் வரும் லிஸ்ட் இதோ, ரியாஸ்கான், பூனம் பாஜ்வா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், பாடகி சுதித்ரா முன்னாள் கணவர் கார்த்திக், பப்லு ப்ருத்விராஜ், பாடகி சுவேதா மேனன், பாடகி கல்பனா, அமலா ஷாஜி, சோனியா அகர்வால், நடிகை கிரண், ரோபோ ஷங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா என பல பிரபலங்களின் பெயர்கள் வலம் வருகின்றன.
மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொன்ன முத்து, அசிங்கப்படுத்திய விஜயா.. பரபரப்பான சிறகடிக்க ஆசை எபிசோட்