Home இந்தியா இந்திய பிரதமராக பதவியேற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பில் கேட்ஸ்

இந்திய பிரதமராக பதவியேற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பில் கேட்ஸ்

0

இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகவும் பதவியேற்ற  நரேந்திர மோடிக்கு (Narendra Modi) மைக்ரோசாப்ட் ( (Microsoft) இணை நிறுவனரான பில் கேட்ஸ் (Bill Gates) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமருக்கு  இன்று (09) அதிபர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,  பதவிப்பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்துள்ளார்.

இதனையடுத்து  பில் கேட்ஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக மோடி பதவிப் பிரமாணம்!

இந்தியாவின் நிலை

இதுதொடர்பாக, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 3 -வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.

சுகாதாரம், விவசாயம், பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்திற்கான புதுமைக்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் பலப்படுத்தி உள்ளீர்கள்.

இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தொடர்ச்சியான கூட்டாண்மையை எதிர்நோக்குகிறோம் என பதிவிட்டுள்ளார். 

கனடாவில் உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்த்தாக்கம்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version