Home இலங்கை அரசியல் ரணிலுக்கு ஆதரவான சுமந்திரனின் கருத்து: கவலை தெரிவித்த பிமல்

ரணிலுக்கு ஆதரவான சுமந்திரனின் கருத்து: கவலை தெரிவித்த பிமல்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் தெரிவிப்பது
கவலை அளிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (24) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை
அளிக்கின்றது.

படுகொலைகள் 

அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில்
இருந்து கதைக்கின்றாரா ?

படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்தான் ரணில்
விக்ரமசிங்க அத்தோடு, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டும் உள்ளது.

இப்படிபட்ட நபரை பாதுகாக்கும் விததத்தில் கருத்து வெளியிடுவது
கவலையளிக்கின்றது.

இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம், பலம் பொருந்தியவர்களுக்கு
எதிராக சட்டம் செயற்படாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை அகதி

ரணில் விக்ரமசிங்க
மட்டும் அல்ல எப்படியான நபரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்படவேண்டும், இதுவிடயத்தில் எவருக்கும் விதி விலக்கல்ல.

அதேவேளை, இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு உரிய
ஏற்பாடுகளை செய்துகொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஒரு
வருடமாகின்றது.

இதனை முன்னிட்டு முதலாம் திகதியில் இருந்து அபிவிருத்தி
திட்டங்கள் ஆரம்பமாகின்றது, வடக்கில் இருந்துதான் அதற்குரிய நடவடிக்கையை
மேற்கொள்ளவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

you may like this…!

https://www.youtube.com/embed/7zmDOoHGs-8

NO COMMENTS

Exit mobile version