Home இலங்கை அரசியல் அநுர அரசின் சதியொன்று அம்பலம் – 23 ஆம் திகதியன்று கறுப்புக்கொடி போராட்டத்துக்கு கஜேந்திரன் அழைப்பு!

அநுர அரசின் சதியொன்று அம்பலம் – 23 ஆம் திகதியன்று கறுப்புக்கொடி போராட்டத்துக்கு கஜேந்திரன் அழைப்பு!

0

எதிர்வரும் 23 ஆம் திகதியன்று நட்புறவுப் பாலம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில்
அநுர அரசின் பாரிய சதித்திட்டம் ஒன்று நிகழவுள்ளதாக எச்சரித்துள்ள தமிழ் தேசிய
மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் , அநுர அரசின் எடுபிடிகளாகச்
செயற்படும் நபர்களின் இந்த வலையில் வீழாது அன்றைய நாளில் கறுப்புக்கொடி கட்டி
அதற்கு எதிர்ப்பு வெளிபடுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளார்.

கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய போது அவர் இவ்வாறு

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அவர் மேலும் கூறுகையில் –

எதிர்வரும் 23 ஆம் திகதி அதாவது யூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த
ஒருநாள். இந்நாளின் வரலாற்றை மழுங்கடிக்க அநுர அரசு சதித் திட்டம் ஒன்றை மிக
சாதுரியமாக நகர்த்த முயற்சிக்கின்றது.

அதாவது குறித்த தினத்தன்று தென்னிலங்கையில் இருந்து ஒரு தொகுதி நபர்களை
யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இங்குள்ள அநுர அரசின் எடுபிடிகளைக் கொண்டு
மக்களை ஏமாற்றி அழைத்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக்
கூறி நட்புறவுப் பாலம் என்ற நிகழ்வை நடத்த முயற்சிக்கின்றது.

இது தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இலங்கையில் நடைபெற்ற யுத்தக்
குற்றங்களுக்கு சர்வேச குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள முயற்சிக்கும்போது அதை
சிதைப்பதற்கு அல்லது திசை திருப்பும் நகர்வாகவே இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version