Home இலங்கை சமூகம் சோற்றில் பூச்சி: உணவக உரிமையாளருக்கு விடுக்கப்பட்ட தண்டனை

சோற்றில் பூச்சி: உணவக உரிமையாளருக்கு விடுக்கப்பட்ட தண்டனை

0

பூச்சியுடன் உணவு விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கொள்ளுபிட்டிய பகுதியில் இயங்கி வந்த ஒரு உணவக உரிமையாளர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பூச்சி கிடந்த சோற்றை விற்பனை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, மாளிகாகந்த நீதவான் லோசனா அபேவிக்கிரம வீரசிங்கவினால் 75,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை

மேலும், குற்றவாளிக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

பூச்சியுடன் இருந்த ஃபிரைட் ரைஸை கொள்வனவு செய்த வாடிக்கையாளர் ஒருவர் கொழும்பு கொள்ளுபிட்டிய பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம், முறைப்பாடாளருக்கு 60,000 ரூபா இழப்பீடு வழங்க உணவக உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

கொள்ளுபிட்டிய சந்திக்கு அருகே உள்ள அந்த உணவகம், பொது சுகாதார பரிசோதகர் இண்டிகா பிடவெல தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் பின்னர் உரிய சட்டங்களை மீறியதாக கண்டறியப்பட்டு, உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version