Home இலங்கை அரசியல் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் தேர்தல் களத்தில்: பிரதமர் சுட்டிக்காட்டு

எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் தேர்தல் களத்தில்: பிரதமர் சுட்டிக்காட்டு

0

எந்தவொரு அரசியல் ரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

இவர்களில் சிலர் கருப்பு பணத்தினை வெள்ளையாக்கும் நோக்கில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மகாநாயக்க தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள்

அந்தவகையில், சிலர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக உத்தியோகப்பூர்வமான வெளியிடப்படாத பணத்தைச் செலவழித்து, ஏதாவது ஒரு வழியில் பிரபலமடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்கள் முன் உரையாற்றுவதற்காக அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும் தொலைக்காட்சி நேரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான விளக்கங்களை முன்வைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission) முழு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், இந்த வரம்புகளை மீறுபவர்களுக்கு எதிரான சட்டத்தினை  நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

[W2JUEBP
]

NO COMMENTS

Exit mobile version