Home இலங்கை அரசியல் அரசியல்வாதிகளுக்கு கலால் உரிமம்: முற்றாக நிராகரிக்கும் திணைக்கள ஆணையாளர் நாயகம்

அரசியல்வாதிகளுக்கு கலால் உரிமம்: முற்றாக நிராகரிக்கும் திணைக்கள ஆணையாளர் நாயகம்

0

அரசியல்வாதிகளுக்கு கலால் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி (M.J Gunasiri) முற்றாக நிராகரித்துள்ளார்.

அந்தவகையில், இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் மதுபான அனுமதிப்பத்திரத்தை கோரவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை கவருவதற்காக அரசாங்கம் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முழு வெளிப்படைத்தன்மை

அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றும் வகையில் நாங்கள் கலால் உரிமங்களை வழங்குகின்றோம். வழங்கப்படும் உரிமங்களில் முழு வெளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. சட்த்திற்கு புறம்பாக எங்களால் கலால் உரிமம் வழங்க முடியாது.

கலால் அறிவிப்பு 902 மற்றும் 2/ 2024 ஆகிறவற்றின் கீழ் உரிமங்கள் வழங்கப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, உரிமக் கட்டணத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் வரலாற்றில் முதல் தடவையாக உரிமம் வழங்கும் போது ஒரு தடவை கட்டணமாக பெரும் தொகையை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்.

கலால் திணைக்களம்

அதன்படி, ”மாநகர சபை எல்லைக்குள் நிறுவப்பட்ட உரிமம் பெற்ற மதுபானக் கடைக்கு 15 மில்லியன் ரூபாவும், நகரசபை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு ர12.5 மில்லியன் ரூபாவும், பிரதேச சபை எல்லைக்குள் இருந்தால் 10 மில்லியன் ரூபாவும் அறவிடப்படவுள்ளன.

இதன் மூலம், அரசுக்கு ரூ.2,000 மில்லியன் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் இந்த ஆண்டுக்காக கலால் திணைக்களத்தின் இதுவரையிலான வருமானம்,1750 மில்லியன் ரூபாவாகும்.

ஊழியர்கள் பற்றாக்குறை

அரசுக்கு வருமானம் ஈட்டும் மூன்று முக்கிய துறைகள் உள்ளன. அவை உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கலால் திணைக்களம் ஆகும்.

இந்த ஆண்டு எங்களின் வருவாய் இலக்கு ரூ. 232 பில்லியன். இது கடந்த ஆண்டை விட ரூ. 53 பில்லியன் அதிகரிப்பு.  429 ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தும் நாங்கள் எங்களது இலக்கினை அடந்துள்ளோம்.

இதை விமர்சிப்பவர்கள் கண்டிப்பாக ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அரசு வசூலிக்கும் வரி வருவாய் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் செலவிடப்படுகிறது. அந்தவகையில் அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டுவதே எங்களின் நோக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version