சபரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத்துக்குச் சொந்தமான காணியில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் காணியில், துப்புரவுப் பணியின் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த வெடிகுண்டானது, போரின் போது வைக்கப்பட்டிருக்காலம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடரபான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
