Home இந்தியா இந்தியாவில் விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு அச்சுறுத்தல்

இந்தியாவில் விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு அச்சுறுத்தல்

0

இந்தியாவின் (India) விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான ஆறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வெடிகுண்டு மிரட்டலானது இன்று (20) விடுக்கப்பட்டுள்ளதாக  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விஸ்தாரா நிறுவனத்தின் மும்பையில் (Mumbai) இருந்து சிங்கப்பூர் (Singapore) செல்லும் விமானம் உள்ளிட்ட ஆறு விமானங்களுக்கே இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள்

இதனடிப்படையில், UK25 விமானம் (டெல்லி முதல் பிராங்பேர்ட்), UK106 விமானம் (சிங்கப்பூர் முதல் மும்பை), UK146 விமானம் (பாலி முதல் டெல்லி வரை), UK116 விமானம் (சிங்கப்பூர் முதல் டெல்லி), UK110 விமானம் (சிங்கப்பூர் முதல் புனே வரை) மற்றும் UK107 விமானம் (மும்பை முதல் சிங்கப்பூர்) ஆகிய விமானங்களுக்கே இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நேற்றைய தினம் (19) இந்திய விமான நிறுவனங்களின் 30 இற்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

பாதுகாப்பு அமைப்புகள்

இவ்வாறான தொடர்ச்சியான அச்சுறுத்தல்களானது  பாதுகாப்பு அமைப்புகள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளன.

இந்தநிலையில், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த ஏழு நாட்களில் 70 இற்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version