Home இலங்கை சமூகம் தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு தாராளம் : வெளிச்சத்திற்கு வந்த கணக்காய்வு அறிக்கை

தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு தாராளம் : வெளிச்சத்திற்கு வந்த கணக்காய்வு அறிக்கை

0

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தபால் தலைமையகத்தில் உள்ள 81 சாரதிகளுக்கு எட்டு மாதங்களில் ஒரு மில்லியன், முப்பத்தாறு இலட்சத்திற்கும் அதிகமான தொகை மேலதிக நேர கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த கொடுப்பனவுகள் டிசம்பர் 2022 மற்றும் ஜூலை 2023 க்கு இடையில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சாரதி செலுத்தும் வாகனங்களின் எண்கள் இல்லை

மேலதிக நேர பற்றுச்சீட்டுகள் எதிலும் சாரதி செலுத்தும் வாகனங்களின் எண்கள் இல்லை என்றும், அதனால் பணம் செலுத்தப்பட்டதை சரி பார்க்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

[AAQQ2

அனுமதி பெறாத கொடுப்பனவு

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தபால் திணைக்களத்தின் செயற்பாட்டு ஊழியர்களில் அங்கம் வகிக்காத உள்ளக கணக்காய்வு திணைக்கள ஊழியர்களுக்கு சுமார் பன்னிரெண்டு இலட்சம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த கொடுப்பனவுகளை செலுத்த திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படவில்லை.

இலங்கை தபால் திணைக்களத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version