Home இலங்கை அரசியல் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (29)கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

கனடாவில் ஈழத்தமிழ் அரசியல் பிரமுகர் மரணம்

ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

அப்போது, ​​பிரதிவாதி பௌசி நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.அவர் தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால்  நீதிமன்றத்திற்கு வரவில்லை என  சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அதனை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையையும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, வழக்கை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் பிரதிவாதியை நீதிமன்றில் முன்னிலையாகி நோட்டீஸ் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version