Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் : அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் : அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

0

மட்டக்களப்பில் (Batticaloa) முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை
துரிதப்படுத்த உகந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றைய தினம் (29.04.2024) மட்டக்களப்பு
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

நாட்டில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய்

கலந்து கொண்டோர் 

மேலும், மைலத்தமடு, மாதவனை மேயச்சல் தரைப்பிரச்சினை, வாகரையில் இல்மனைட் மற்றும் இறால் பண்ணை தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டு அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேபோன்று, விவசாயம், நீர்பாசனம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை
சந்திரகாந்தன், கிழக்கு
மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்படும் தமிழரின் காணிகள்: துரைராசா ரவிகரன் களவிஜயம்

தென்னிலங்கையில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் : மூவர் மரணம் – ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version