Home இலங்கை குற்றம் 70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய இள வயது காதலன்

70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய இள வயது காதலன்

0

மாத்தறை – வாஹல்கட பிரதேசத்தில் 70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய இளவயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதான காதலனும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட 24 வயதான இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 160,000 ரூபாய் மதிப்புள்ள நகைகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயதான பெண்

புத்தளம் வென்னப்புவ பகுதியை சேர்ந்த வயதான பெண், அந்தப் பகுதியில் வீட்டு வேலைகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Missed call மூலம் ஏற்பட்ட தொடர்பு சுமார் ஒரு வருடம் நீடித்த நிலையில் அது காதலாக மாறியிருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் சாதகமான பயன்படுத்திய சந்தேக நபரான காதலன், வாஹல்கட குளக்கரைக்கு வயதான பெண்ணை அழைத்து நகைகளை திருடியுள்ளனர்.

சந்தேக நபர்கள்

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக வயதான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version