Home அமெரிக்கா அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்த கொலை! மக்களால் போற்றப்படும் கொலையாளி

அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்த கொலை! மக்களால் போற்றப்படும் கொலையாளி

0

அமெரிக்காவின் வர்த்தகரும் யுனைடெட் ஹெல்த்கேர்(United Healthcare) காப்புறுதின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரையன் தொம்சன்(Brian Thompson) கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயது இளைஞன் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா மேரிலாந்தில் உள்ள டவ்சன் நகரைச் சேர்ந்த லூய்கி நிக்கோலஸ் மங்கியோன்(Luigi Mangione) என்ற இளைஞனே இவ்வாறு நேற்று(20.12.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரையன் தொம்சனை பல மாதங்களாக பின்தொடர்ந்துள்ள மங்கியோன், வெகுநாட்களாக திட்டமீட்டி அவரை சுட்டு கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி நிறுவனத்தின் மோசடி

மங்கியோன் நியூயோர்க்கிற்குப் பயணம் செய்து, மென்ஹாட்டன் ஹோட்டலுக்கு முன்னால் தொம்சனை சுட்டுக் கொன்றுள்ளார்.

யுனைடெட் ஹெல்த்கேர் என்ற சுகாதார காப்புறுதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை தொம்சன் வகித்ததாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளதாக ‘FBI’ தெரிவிக்கின்றனர்.

குறித்த காப்புறுதி நிறுவனத்தில் பணத்தை கோருவதில் கடினத்தன்மை இருந்ததால் பல அமெரிக்கர்கள் நோய்வாய்பட்டு இறந்துள்ளதாக சமூக வலைதள பாவனையாளர்கள் கூறி வருகின்றனர்.

அதிகப்பட்ச தண்டனை

இதனால் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு நீதியை பெற்றுத்தருவதற்காக இந்த கொலை சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். 

மேலும், சிலர் மங்கியோனை விடுதலை செய்யுமாறு போராட்டம் நடாத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், ஒருவரை கொலை செய்வது ஒரு தார்மீகமான செயல் அல்ல.

இந்நிலையில், கொலையாளியான லூய்கி நிக்கோலஸ் மங்கியோன் என்ற இளைஞனுக்கு அதிகப்பட்ச தண்டனையாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version