Home உலகம் பிரித்தானியாவிலிருந்து உணர்வெழுச்சியுடன் வந்த தமிழ் எம்.பியின் மாவீரர் தின செய்தி!

பிரித்தானியாவிலிருந்து உணர்வெழுச்சியுடன் வந்த தமிழ் எம்.பியின் மாவீரர் தின செய்தி!

0

பிரித்தானியாவில் அரசியல் கட்சிகளின் பிரபலங்களும் நினைவேந்தல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் முன்னாள் நிழல் நிதியமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் மக்டொனால் தனது செய்தியை காணொளி ஊடாக வழங்கியுள்ளார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் தனது மாவீரர் நாள் அறிக்கையிடலை அறிக்கை வடிவத்தில் வெளியிட்டுள்ளார்.

மாவீரர் நாள்

இன்றைய தினம் (27.11.2025) மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர் பிரதேசங்களில் நினைவேந்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் கனமழை மற்றும் பலத்த காற்றுடன் சீரற்ற வானிலை நிலவி வருகிறது.

இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மாவீரர் தின நினைவேந்தலுக்காக தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version