Home அமெரிக்கா பிரித்தானிய வரலாற்றில் முதல் பெண் நிதியமைச்சர் நியமனம்

பிரித்தானிய வரலாற்றில் முதல் பெண் நிதியமைச்சர் நியமனம்

0

பிரித்தானியாவில் அதிகார மாற்றம் ஏற்பட்டு தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) நாட்டின் 58ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவையை அமைத்துள்ள அவர், வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதான ரேச்சல் ரீவ்ஸை(Rachel Reeves) நியமித்துள்ளார்.

அமோக வெற்றி 

இது தவிர துணைப் பிரதமர் பதவி ஏஞ்சலா ரெய்னருக்கு கிடைத்துள்ளதோடு,  அவருக்கு சமத்துவம், வீட்டுவசதி மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று மொத்தமுள்ள 650 இடங்களில் அக்கட்சி 412 இடங்களை கைப்பற்றியது.

கன்சர்வேட்டிவ் கட்சிகள் 120 இடங்களை மட்டுமே வென்றன. கடந்த 200 ஆண்டுகளில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மிகப்பாரிய தோல்வி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஸ்டார்மர் அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புகள்

துணைப் பிரதமர் – ஏஞ்சலா ரெய்னர்

நிதி அமைச்சர் – ரேச்சல் ரீவ்ஸ்

வெளியுறவு அமைச்சர் – டேவிட் லாம்மி

உள்துறை அமைச்சர் – யவெட் கூப்பர்

பாதுகாப்பு அமைச்சர் – ஜான் ஹேலி

கல்வி அமைச்சர் – பிரிட்ஜெட் பிலிப்சன்

எரிசக்தி அமைச்சர் – எட் மிலிபாண்ட்

வர்த்தக அமைச்சர் – ஜொனாதன் ரெனால்ட்ஸ்

போக்குவரத்து அமைச்சர் – லூயிஸ் ஹை

நீதி அமைச்சர் – ஷபானா மஹ்மூத் 

NO COMMENTS

Exit mobile version