கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி (Bahujan Samaj Party) தலைவர் ஆம்ஸ்ட்ரோங் (Armstrong) கொலை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த அரசியல்வாதி அஞ்சலை கைது செய்யப்பட்டதாக இந்நிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை – ஓட்டேரி பகுதியில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 5ஆம் திகதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ரோங் அவரது வீடு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட குழுவினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம்
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக்கழக (DMK) சட்டத்தரணி அருள், பாரதிய ஜனதாவின் நிர்வாகியான செல்வராஜ், அண்ண திராவிட முன்னேற்றக்கழக (AIADMK) நிர்வாகி மலர்கொடி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸின் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
குறிப்பாக, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பாரதிய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட சென்னை வடமேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று (20) சென்னை (Chennai) எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறவுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.