Home இலங்கை சமூகம் திருகோணமலை – திரியாய் மக்களின் காணி விவகாரம்

திருகோணமலை – திரியாய் மக்களின் காணி விவகாரம்

0

திருகோணமலை(Trincomalee) – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திரியாய்
மக்களின் காணி விவகாரம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு அனைத்து விவசாயிகளையும் உரிய ஆவணங்களுடன்
வருகை தருமாறு புல்மோட்டை காவல்துறை உயர் அதிகாரி பணித்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம்(10) குச்சவெளி கமநல சேவைத் திணைக்கள
அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் 2024ஆம் ஆண்டுக்கான பெரும்போக வயற்
செய்கைக்காக மக்கள் தங்கள் காணிகள் அளவீடு செய்யச் சென்ற வேளை குறித்த
காணிகளில் அளவீடு செய்ய விடாது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த புல்மோட்டை காவல்துறை உயர் அதிகாரி மேற்படி தெரிவித்துள்ளார்.

மக்களின் காணிகள்

திருகோணமலை திரியாய் மக்களின் பூர்விக வயல் நிலங்களில் ஒன்றான வளத்தாமலையடி, ஆதிக்காடு, வேடன்
குளம், போன்ற 880 ஏக்கர் விஸ்தீரனமுடைய 125 வருடப் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து உறுதி உடைய
காணிகள் ஆகும்.

1985 ஆம் ஆண்டு வரை அந்நிலங்களில் வயற்செய்கை மேற்கொண்டு வந்த நிலையில் 1985ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மக்கள்
பல்வேறு மாவட்டங்களிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனைதொடர்ந்து 1990ஆம் ஆண்டு மீண்டும் மக்கள் வந்து இக்காணிகளில் மானாவாரி நெற்
செய்கையை செய்துள்ளனர்.

இதன்போது, ஏற்பட்ட இனக்கலவரத்தினைத்தொடர்ந்து 2002ஆம் ஆண்டு மீண்டும் தமது
சொந்த நிலங்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பிக்குவின் அச்சுறுத்தல்

இருந்த போதும் போரினால் வாழ்வாதாரங்களை இழந்த விவசாயிகள் 2020ஆம் ஆண்டு மீண்டும் தமது வயல் நிலங்களில்
வயற்செய்கை மேற்கொள்ளச் சென்ற வேளை புல்மோட்டை அரிசி மலைப் பிக்குவினால் மக்களின் அனைத்துக்காணிக்காணிகளும்
அடாவடியான முறையில் காணிகள் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு கடுமையான
அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

2022ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மக்களின் காணிகளை மக்களிடம் கையகப்படுத்த
உத்தரவு பிறபித்த போதும் தொடர்ந்தும் அடாவடியான முறையில் பிக்கு செயற்பட்டு
வந்த நிலையில் கடந்த 05.09.2024ஆம் திகதி விவசாய நடவக்கையில் ஏற்பட்ட
விவசாயிகளை தடுத்து நிறுத்தி மீண்டும் பிக்கு தனது அடாவடியை தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக இப்பிணக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம்
தெரியப்படுத்தப்பட்டு கடந்த 07.09.2024 ஆம் திகதி மாலை திருகோணமலை மாவட்ட
அரசாங்க அதிபர் பிக்கு உற்பட காணி உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து முழுமையான
விசாரணைக்குப் பிறகு உரிய ஆவணங்கள் உள்ள விவசாயிகள் உடனடியாக வயற்செய்கையில்
ஈடுபடுமாறு அனுமதி வழங்கியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version