Home இலங்கை அரசியல் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய பௌத்த தேரர் : காத்தான்குடியில் சம்பவம்

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய பௌத்த தேரர் : காத்தான்குடியில் சம்பவம்

0

பௌத்த மத தலைவர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய சம்பவம்
இன்று காலை(31) காத்தான்குடியில் பதிவாகியுள்ளது.

பலாங்கொட ஸ்ரீ சுதர்ம ராம விகாரையின் விகாராதிபதியும், மனிதநேய
செயற்பாட்டாளருமான பொகவந்தலாவே ராகுல தேரரே இவ்வாறு காத்தான்குடி பொலிஸ்
நிலையத்தில் வைத்து குறித்த பொலிஸ் அதெிகாரிக்கு மன்னிப்பு வழங்கினார்.

சிரமத்திற்கு உட்படுத்திய அதிகாரி

காத்தான்குடி கடற்கரை வீதியில் குறித்த பௌத்த மத தலைவர் உணவு விடுதியொன்றில்
உரையாடிக் கொண்டிருந்தபோது மேற்படி பொலிஸ் அதிகாரி குறித்த பௌத்த மத தலைவரின்
மீது அவதூறான வார்த்தைகளை பேசி அவரை சிரமத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த
பொலிஸ் அதிகாரி கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு தன்னை குறித்த பொலிஸ்
அதிகாரி இவ்வாறு சிரமத்திற்கு உட்படுத்தியதாக முறையிட்டார்.

இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த தகவலை
மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்த போது தவறாக நடந்து கொண்ட அதிகாரி காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு  அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. 

இதனையடுத்து பௌத்த தேரர், தன்னை அவதூறாக பேசிய பொலிஸ் அதிகாரியை மன்னித்துள்ளார். 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை – திருவிழா

NO COMMENTS

Exit mobile version