Home முக்கியச் செய்திகள் பதுளையில் கோர விபத்து – 2 பேர் பலி: பலர் படுகாயம்

பதுளையில் கோர விபத்து – 2 பேர் பலி: பலர் படுகாயம்

0

பதுளை (Badulla) – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவமானது இன்றையதினம் (01.11.2024) இடம்பெற்றுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோர விபத்து

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்து, 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/bus-accident-involving-students-1730433576?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version