Home முக்கியச் செய்திகள் ஐ.எம்.எப் உடனான அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்

ஐ.எம்.எப் உடனான அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்

0

இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் (Krishna Srinivasan) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இன்று (01) நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என்றும் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசாங்கம்

இதேவேளை, இது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக இலங்கைக் குழுவொன்று வொஷிங்டனுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மற்றும் குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டமையையும் அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.    

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

Source: https://ibctamil.com/article/extended-fund-facility-of-sri-lanka-by-imf-1730445438

NO COMMENTS

Exit mobile version