Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் அதானியின் மின்சாரத்திட்டம்: அமைச்சரவைக்கு செல்லும் அறிக்கை

இலங்கையின் அதானியின் மின்சாரத்திட்டம்: அமைச்சரவைக்கு செல்லும் அறிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சாரத் திட்டங்கள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பான விபரங்களை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விபரங்கள் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, முன்னதாக காற்றாலை மின் திட்டங்களை பல துறைகள் மூலம் ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவு

மன்னார் மற்றும் பூநகரியில் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் காற்றாலை மின்சாரத் திட்டங்கள் மூலம் மொத்தம் 484 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டங்களில் அதானி குழுமம் ஏற்கனவே சில முதலீடுகளை செய்துள்ளது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்த பின்னர், இது குறித்து அமைச்சரவை முடிவெடுக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version