கடந்த 12 மாதங்களாக அநுர தலைமையிலான அரசாங்கத்திற்குள் கொதித்துக்கொண்டிருந்த நெருக்கடி தற்போதைய அமைச்சரவை மாற்றத்தின்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சி தலைமையகத்தில்ஊடகங்களுக்கு உரையாற்றும் போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மறுசீரமைப்பும் அந்த அரசாங்கங்களின் உள் நெருக்கடியைக் குறிக்கிறது .
உள் நெருக்கடியை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு
இது மிகவும் தெளிவான உலக அரசியல் யதார்த்தம். புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மறுசீரமைப்பு அரசாங்கத்தின் உள் நெருக்கடியை சம்பிரதாயமாக வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மறுசீரமைப்பு அரசாங்கத்தின் கடந்த 12 மாதங்களாக அரசாங்கத்திற்குள் கொதித்துக்கொண்டிருந்த நெருக்கடி வெளிச்சத்திற்கு வந்த தருணம் என்றும் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
பிமல் ரத்நாயக்கவை பலிக்கடாவாக்க திட்டம்
கொள்கலன் மோசடிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை குற்றம் சாட்டி, அரசாங்கத்தின் மீதமுள்ள பகுதியை விடுவிக்க ஜனாதிபதி முயற்சிப்பார் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, கொள்கலன் மோசடியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
