Home முக்கியச் செய்திகள் அரச வைத்தியர்களின் ஓய்வு வயது மாற்றம்! அமைச்சரவை எடுத்த தீர்மானம்

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது மாற்றம்! அமைச்சரவை எடுத்த தீர்மானம்

0

நாட்டிலுள்ள அரச வைத்தியர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், இந்த திருத்தம் ஓய்வூதிய சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இதனால், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் ஓய்வு பெறவிருந்த அரச வைத்தியர்கள் அனைவரும் 63 வயது வரை சேவையாற்ற வாய்ப்பு உள்ளது.

வைத்தியர்களின் ஓய்வு வயது

அதன்படி, விசேட வைத்திய நிபுணர்கள், வைத்திய அலுவலர்கள், விசேட பல் சுகாதார நிபுணர்கள், பல் சுகாதார நிபுணர்கள், நிர்வாக வைத்திய அலுவலர்கள் மற்றும் அனைத்து அரச வைத்தியர்களினதும் ஓய்வு வயது 63 ஆக நீடிக்கப்படும்.

இதற்கு முன்னர் அரச வைத்தியர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்ததுடன் கடந்த அரசாங்கம் அதனை 60 வயதாக குறைத்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/cabinet-resolution-retirement-age-of-govt-doctors-1734685149?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version