Home உலகம் அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு…! பலியான உயிர்கள்

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு…! பலியான உயிர்கள்

0

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கலிஃபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ஸ்டாக்டன் பகுதியில் உள்ளதொரு அரங்கில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூடு 

குறித்த நிகழச்சியில் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதில் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்பட மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, பத்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் 

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு மாயமான நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அந்த நபரது அடையாளங்களை வெளியிட்டுள்ள அதிகாரிகள், அவரைப் பிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

இதனடிப்படையில், துப்பு கிடைத்தால் உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version