Home இலங்கை அரசியல் பொது வேட்பாளருக்கு ஆதரவாக யாழ். ஊர்காவற்றுறையில் முன்னெடுக்கப்பட்ட பிரசார நடவடிக்கை

பொது வேட்பாளருக்கு ஆதரவாக யாழ். ஊர்காவற்றுறையில் முன்னெடுக்கப்பட்ட பிரசார நடவடிக்கை

0

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வடக்கு மாகாண கடற்றொழில் அமைப்புகளின் ஏற்பாட்டில் யாழில் பிரசார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை (Pakkiyaselvam Ariyanethran) ஆதரித்து குறித்த தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று (09) இடம்பெற்றது.

இதன்போது தமிழ் பொது வேட்பாளர் அதிக வாக்குகளை
பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை – தம்பாட்டி முத்துமாரி அம்மன்
ஆலயத்தில் வழிபாடுகள் செய்து தேங்காய் உடைக்கப்பட்டது.

துண்டுப்பிரசுர விநியோகம் 

அதனைத் தொடர்ந்து ஆலய பிரத குருவுக்கு சம்பிரதாய பூர்வமாக துண்டுப்பிரசுரங்கள்
வழங்கப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நகர பகுதியில் பிரசார பணிகள்
முன்னெடுக்கப்பட்டது.

இந்த தேர்தல்
பிரசாரத்தில் அகில இலங்கை கடற்றொழில் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர்
அன்னலிங்கம் அன்னராசா, யாழ்.வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க
சமாசங்களின் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம், கடற்றொழிலாளர் அமைப்புக்களின்
பிரதிநிதிகள் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/campaigning-in-support-of-tamil-general-candidate-1725881467

NO COMMENTS

Exit mobile version