கனடாவின் (Canada) பிரம்டன் நகரில் அமைந்துள்ள தமிழின இனஅழிப்பு நினைவுச்சின்னப் பகுதியில் சேதம் ஏற்படுத்தப்பட்டமை குறித்த வெளியான தகவல்கள் தமிழ் சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
எனினும் தமது முகங்களை மூடிய நிலையில் வந்த இனந்தெரியாத நபர்கள் நினைவுச்சின்னம் உள்ள இடத்தில் பொருத்தப்பட்ட சில மின்குமிழ்களையே சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இது குறித்து பிரம்டன் மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக குறிப்பிடப்படுவதுடன் இதனை யார் செய்தார்கள் என்பது விசாரணையின் முடிவிலே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த பல விடயங்களை அலசி ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…….
https://www.youtube.com/embed/VXdXIq2Ge7E
