இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் குழுவினர் கிளிநொச்சியில் உள்ள பிரபல சுற்றுலாத் தளமான றீ(ச்)ஷா பண்ணைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயமானது, இன்று(28) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் லங்காசிறி, ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனும் கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த விஜயத்தின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட குழுவினர் றீ(ச்)ஷாவின் பல இடங்களையும் பார்வையிட்டுள்ளனர்.
