Home உலகம் கனடா கிரிக்கெட் அணித்தலைவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனடா கிரிக்கெட் அணித்தலைவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

0

கனடா(canada) கிரிக்கெட் அணித்தலைவர் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவில் பிறந்து, கனடா கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பவர் நிகோலஸ் கிர்டன். இவரே போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக சுங்கத்துறையால் கைது 

இவர் பார்படோஸ் கிராண்ட்லீ ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் 9 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த தகவல் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version