Home இலங்கை சமூகம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்!

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்!

0

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா பேரனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் முன்வந்துள்ளது.

அதன்படி, கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தில் இளம் தொண்டர்களின் முன்னெடுப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு, ஆடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சேகரிப்பு திட்டம் இடம்பெற்றது.

நிவாரண உதவி

குறுகிய காலத்திலேயே, இந்த திட்டத்தின் மூலம் பல அத்தியாவசியப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நேர்த்தியாக பொதிகளாக்கப்பட்டு, ஸ்கை ரூட் ட்ரெவல்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version