Home உலகம் பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கைகொடுப்போம் கேரி ஆனந்தசங்கரி உறுதி!

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கைகொடுப்போம் கேரி ஆனந்தசங்கரி உறுதி!

0

டித்வா சூறாவளி நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.

பரவலான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைத் தூண்டிய டித்வா சூறாவளியால் இலங்கை பேரழிவிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேரழிவுகள் 

மேலும் குறித்த அறிக்கையில், “டித்வா சூறாவளி நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் இலங்கையில் பல குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் பேரழிவையும் நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொள்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களுடன் கனடா துணை நிற்கிறது, மேலும் சமூகங்கள் மீண்டு மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவை தொடர்ந்து வழங்கும்.” என கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டித்வா புயலால் ஏற்பட்ட பாரிய இழப்பை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாக கனடா, இலங்கைக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிக்கை- https://www.canada.ca/en/global-affairs/news/2025/12/canada-provides-humanitarian-assistance-in-response-to-cyclone-in-sri-lanka.html

NO COMMENTS

Exit mobile version