Home இலங்கை அரசியல் மகிந்தவை சந்திக்க செல்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

மகிந்தவை சந்திக்க செல்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

0

முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக தங்கல்லை கார்ல்டன் இல்லத்திற்கு வருகைத் தருபவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு  தடை

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகளை இரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு  கொழும்பு விஜேராம அரச இல்லத்தில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச தங்காலை கார்ல்டன் இல்லத்தை நோக்கி இடம்பெயர்ந்தார்.

இதனையடுத்து,  அவரைப் பார்வையிடுவதற்காக நாள்தோறும் பெருமளவான மக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் படையெடுத்து வருகின்றனர். 

மேலும், இவ்வாறு வரும் பொதுமக்கள் உணவுகள் உள்ளிட்டவற்றை மகிந்த ராஜபக்சவுக்கு எடுத்து வருவதுடன்,  அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

எனினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள்,  அவரோடு புகைப்படம் எடுப்பதற்கு தற்போது தடை விதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.   

NO COMMENTS

Exit mobile version