அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு (Donald Trump) உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) வாழ்த்து தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வாழ்த்து செய்தியை ஜெலன்ஸ்கி, தொலைபேசியின் ஊடாக டொனால்ட் ட்ரம்புக்கு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில், டொனால்ட் ட்ரம்ப் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்தம்
இதனடிப்படையில், தற்போது காசாவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்தநிலையில், இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
