Home இலங்கை அரசியல் ரணில் – கோட்டாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

ரணில் – கோட்டாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

0

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரா உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகள்

காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தவறினார்கள் என்று அவர்களுக்கு எதிரான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும், அதன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் கோரியே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றாடல் நீதி மையம் குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கு உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பான ஆட்சேபங்களைத் தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version