Home முக்கியச் செய்திகள் யாழில் அதிரடி :தென்பகுதியிலிருந்து வந்த எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

யாழில் அதிரடி :தென்பகுதியிலிருந்து வந்த எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

0

எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடனும் போதையில் வாகனம் செலுத்திய
நிலையிலும் இன்று (08) சாவகச்சேரி காவல்தறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 முத்துராஜவெல பகுதியில் இருந்து யாழிற்கு எரிபொருள் ஏற்றிவந்த எரிபொருள்
தாங்கியினை யாழ் மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையாக
சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து ஐஸ், கஞ்சா
பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு
உட்படுத்திய நிலையில் சாரதி ஐஸ் மற்றும் கஞ்சா பயன்படுத்திய நிலையில்
வாகனத்தை செலுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

கைது செய்யப்பட்ட நபரை நாளைய தினம்(09) சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தும்
நடவடிக்கையில் சாவகச்சேரி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

 

NO COMMENTS

Exit mobile version