Home முக்கியச் செய்திகள் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

0

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும் அதிபர் சட்டத்தரணியுமான கே.வி.தவராசா (Thavarasa) தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (24) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “இவ் வழக்கிற்கு 07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் 2ம்,4ம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்,செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக முன்னிலையாகியிருந்தேன்.

விசேட பாதுகாப்புடன் யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான நீதிபதி இளஞ்செழியன்

வழக்கின் முடிவு

சுமார் மூன்று மணி நேரங்கள் இவ் வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

கடந்த பெப்ரவரி 15ம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.

வழக்காளி கோரும் நிவாரணம்

இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம் ஆனால் காலம் செல்லும் இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில் வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும்.

வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்க தயாராக இருக்கிறோம், எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்க வேண்டும்.

வழக்கை மீள்ப்பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில் தெரிவித்தேன்” என்றார்.

காத்தான்குடியில் நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதல்: 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

https://www.youtube.com/embed/Jhyg_PtxzLw

NO COMMENTS

Exit mobile version