Home இலங்கை அரசியல் 2000ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி வேட்பாளர்கள் மீது பாயப்போகும் சட்ட நடவடிக்கை

2000ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி வேட்பாளர்கள் மீது பாயப்போகும் சட்ட நடவடிக்கை

0

வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய 2433 உள்ளூராட்சி வேட்பாளர்களின் பெயர்கள் சட்ட நடவடிக்கைக்காக காவல்துறைக்கு அனுப்பப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

அறிக்கைகளைச் சமர்ப்பித்த பிறகு, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், அந்த வேட்பாளர்கள் மீது காவல்துறை தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கும்

வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள வேட்பாளர்கள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட 76992 வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாகவும், அவை மாவட்டச் செயலகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 சமர்ப்பிக்கப்பட்ட வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளில் உள்ள தகவல்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது தவறுகள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு ஆணையத் தலைவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version