Home முக்கியச் செய்திகள் நிலச்சரிவுக்குள் புதையுண்ட வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பணம் மற்றும் நகை

நிலச்சரிவுக்குள் புதையுண்ட வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பணம் மற்றும் நகை

0

ஹங்குரான்கெத்த பகுதியில் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர், நிலச்சரிவால் சேதமடைந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

ஹங்குரான்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட படையினர் இடிபாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, ​​ரூ. 300,000 ரொக்கம் மற்றும் சுமார் ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளை கண்டுபிடித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

உரிமையாளரிடம் ஒப்படைப்பு

இவ்வாறு மீட்கப்பட்ட 300,000 ரூபாய் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் என்பனவே நேற்றைய (14) தினம் உரிமையாளரிடம் இராணுவத்தினரால் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது

NO COMMENTS

Exit mobile version