Home இலங்கை அரசியல் எந்த வேட்பாளருக்கும் அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை : கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு

எந்த வேட்பாளருக்கும் அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை : கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு

0

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை கொழும்பு (Colombo) பேராயரின் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ (Cyril Gamini Fernando) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச (Sajith Premadasa), ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார (Anura Kumara Dissanayake) உட்பட பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை (Malcolm Ranjith) சந்தித்து
பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்காத போதிலும் கத்தோலிக்க மக்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்தும், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும் ஜனாதிபதி தேர்தல்
வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம்” என சிறில்காமினி பெர்ணாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வி போன்ற விடயங்கள் குறித்து ஆராயவே நாங்கள் அவர்களை சந்தித்தோம். இவை கத்தோலிக்கர்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் இல்லை, கடற்றொழிலாளர்கள் விவகாரம் குறித்தும் பேசினோம். கத்தோலிக்கர்களில் பெருமளவு கடற்றொழிலாளர்கள் உள்ளனர்
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version