அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிர்வாகிகள், வெளிநாட்டு தலைவர்கள், இணைய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
2021இல் பைடனின் பதவியேற்பு விழாவை அப்போதைய தேர்தலில் தோல்வியடையந்த ட்ரம்ப் புறக்கணித்திருந்தார்.
கலந்துகொண்ட பிரபலங்கள்
இந்நிலையில், ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் பைடன் கலந்துகொண்டதோடு முன்னாள் ஜனாதிபதிகளான பரக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Donald J. Trump Attends the Presidential Parade https://t.co/xath35WNXE
— Donald J. Trump (@realDonaldTrump) January 20, 2025
அத்துடன், தொழில்நுட்ப நிர்வாகிகளும் உலக பணக்காரர்களுமான எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்குபற்றியிருந்தனர்.
மேலும், ஆர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலி மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.