Home உலகம் இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் அலறி அபாய ஒலி எழுப்பிய கைபேசிகள்

இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் அலறி அபாய ஒலி எழுப்பிய கைபேசிகள்

0

இங்கிலாந்தில் உள்ள கைபேசிகள் ஒரே நேரத்தில் அபாய ஒலி எச்சரிக்கை எழுப்பியுள்ளன.

தேசிய அவசர நிலை நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி இங்கிலாந்தில் முதன்முறையாக 2023-ம் ஆண்டு நடைபெற்றது.நாடு தழுவிய இந்த பயிற்சியின் இரண்டாவது சோதனை முயற்சி தற்போது நடந்து வருகிறது.

அபாய ஒலி எச்சரிக்கை 

அதன்படி நாடு முழுவதும் உள்ள கைபேசிகளில் ஒரே நேரத்தில் அபாய ஒலி எச்சரிக்கை எழுப்பியது. அப்போது சுமார் 10 நொடிகள் கைபேசியில் அதிர்வு ஏற்பட்டது. முடிவில் இது ஒரு சோதனை முயற்சி என்ற குறுஞ்செய்தியும் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

இது உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version