Home இலங்கை அரசியல் “முன்னாள் சபாநாயகரின் முகத்திலிருந்து அரைபோத்தல் மது..” – சபையில் சாமர நையாண்டி பேச்சு

“முன்னாள் சபாநாயகரின் முகத்திலிருந்து அரைபோத்தல் மது..” – சபையில் சாமர நையாண்டி பேச்சு

0

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வெல்லவின் முகத்தை நசுக்கினால் அரைபோத்தல் சாராயம் எடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துளள்ளார். 

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

பதவி நீக்கம்.. 

இது தொடர்பில் அவர் மேலும், “அசோக ரன்வெல்ல, அனர்த்தத்துக்கு மத்தியில் அனர்த்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். ஏற்கனவே அனர்த்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது மீண்டுமொரு முறை அனர்த்தம் ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளார். அவர் மது அருந்தியுள்ளாரா என பார்ப்பதற்கு பலூன் ஊதிப்பார்க்க தேவையில்லை. அவரது முகத்தை நசுக்கினால் அரைபோத்தல் சாராயம் எடுக்கலாம். குடிப்பவரின் முகத்தைப்பார்த்து, அவர் குடிப்பவரா இல்லையா என அறிந்துகொள்ளலாம்.

அதனால் ரன்வல எம்.பிக்கு பலூன் ஊதிப்பார்க்க தேவையில்லை. அவர் குடிப்பவர்தான். அதனால் சட்டம் யாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version