1989-1999 ஆம் ஆண்டுகளில் சிறையில் இருந்தவர்கள் தான் இன்று அமைச்சர்கள், பிரதியமைச்சர்களாக உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (2025.10.22) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இன்று வெலிகம பிரதேச சபையின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை ஒரு கவலைக்குரிய விடயமாகும்.
பிரச்சினை முற்றிய பின்னர் தீர்வு
அவர் தொடர்பில் மறைக்கப்பட்டிருந்த பல தகவல்கள் சமூக ஊடகங்களிலும் யூடியூப்களில் வெளியிடப்படுகின்றன. ஆனாலும் அவர் பிரதேச சபையின் தலைவராவார். மிதிகம பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர்.
எங்களின் பாதுகாப்பும் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அதற்காக நாம் எமது எதிர் கருத்துக்களை தெரிவித்து பிரச்சினைகளை தீர்த்து கொள்வோம். கிழங்கு மற்றும் வெங்காய வரிகள் தொடர்பில் நாடாளுமன்றில் தெரிவித்தேன்.
அப்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று மூன்று மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் கிழுங்கு – வெங்காய விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அரசாங்கம் பிரச்சினை முற்றிய பின்னரே தீர்வை நோக்கிச் செல்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
