Home சினிமா கைகூடாமல் போன முதல் காதல்.. மனம் திறந்த சிவகார்த்திகேயன், பலர் அறியாத தகவல்!

கைகூடாமல் போன முதல் காதல்.. மனம் திறந்த சிவகார்த்திகேயன், பலர் அறியாத தகவல்!

0

சிவகார்த்திகேயன்

அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் மதராஸி.

ஏ.ஆர்.முருகதாஸுடன், சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைத்த இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சம்பளத்தை கேட்பேன், தேவையில்லாமல்.. நடிகை பிரியாமணி அதிரடி பதில்!

தற்போது சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

முதல் காதல்! 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தன் முதல் காதல் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” எனக்கு ஒரு ஒருதலைக் காதல் இருந்தது. ஆனால் அது சில நாட்களில் கரைந்து போனது. ஏனென்றால், அவள் சீக்கிரம் இன்னொரு பையனுடன் கமிட் ஆகிவிட்டாள்.

என் கல்லூரி நண்பர்கள் சிலருக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும். அதன் பின், அவள் வேறு ஒரு பையனைத் திருமணம் செய்து கொண்டாள் என தெரிய வந்தது” என்று தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version