அரபிக் கடலில் பயணித்த இரண்டு கப்பல்களில் இருந்து கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப்பொருள் கப்பலை பாகிஸ்தான் கடற்படை கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தான் கடற்படை, சவுதி கடற்படை தலைமையிலான ஒருங்கிணைந்த கடல்சார் படையின் (CMF) நடவடிக்கையில் குறித்த தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் முதல் சோதனை கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
2 தொன் போதைப்பொருள்
குறித்த கப்பலில் 2 தொன்களுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாகவும், அதன் மதிப்பு 822 மில்லியன் டொலருக்கம் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் கடற்படை மற்றுமொரு கப்பலையும் கப்பலைக் கைப்பற்ற முடிந்துள்ளது.
இதன்போது அதில் 140 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள 350 கிலோகிராம் ஐஸ் மற்றும் 1 மில்லியன் மதிப்புள்ள 50 கிலோகிராம் கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அரேபிய கடலில் இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் கடற்படை 972 மில்லியன் டொலர்களுக்கும் (கிட்டத்தட்ட 1 பில்லியன் டொலர்) மதிப்புள்ள போதைப்பொருட்களை மீட்டுள்ளது.
இருப்பினும், இந்த சோதனைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை கூட்டு கடல்சார் படை இன்று (22) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
