Home இலங்கை அரசியல் ஜனாதிபதியை பாராட்டிய சாமர சம்பத் எம்.பி

ஜனாதிபதியை பாராட்டிய சாமர சம்பத் எம்.பி

0

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,

மக்களுக்கான அரசு

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்த கருத்துக்கள் மற்றும் நிவாரணங்கள் குறிப்பிட்டப்படி வழங்க வேண்டும்.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களும் எதிர்பார்த்த நிவாரணங்களை ஜனாதிபதி கொடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்களித்து மக்களுக்கான அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளனர்.நாம் அதை பாராட்டுகிறோம்.நான் பிரதிநிதித்துவம் செய்யும் பதுளை மாவட்டமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

அவர்களுக்கு ஜனாதிபதி அறிவித்த நிவாரணங்கள் அவர்களின் வாழ்க்கையை மீள கட்டியயெழுப்ப போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

அரசாங்கத்தில் நல்ல திட்டங்களையும் மக்களுக்கான சரியான நிவாரண நடவடிக்கைகளை நாங்கள் கட்டாயம் பாராட்டுவோம் என்றார்.

NO COMMENTS

Exit mobile version