Home முக்கியச் செய்திகள் ரணிலுக்கு பாதுகாப்பின்மை: சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்

ரணிலுக்கு பாதுகாப்பின்மை: சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்

0

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு (Chmuditha Samarawickrama) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைக்காகவே இந்த அழைப்பானை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கப்பட்டுள்ள முறைபாட்டிற்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரபாகரனைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் செக் மேட்

குற்றப் புலனாய்வு

“நீதவான் திலின கமகேவை (Thilina Gamage) கொல்வதற்கு பாதாள உலகத்துடன் இணைந்து சதி செய்த டி.ஐ.ஜி சகாவின் ஒலி நாடா இதோ” எனும் தலைப்பினை கொண்ட காணொளி சமுதிதவாலின் வலையொளி (YouTube) தளத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த காணொளி தொடர்பான அனைத்து விபரங்களையும் தகவல்களையும் கொண்டுவருமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சமுதிதவிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்த காணொளியில் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச புவி தினம் இன்று: கூகுள் அறிமுகப்படுத்திய புதிய டூடுல்

ஜேவிபிக்கு கத்தோலிக்க வாக்குகள் இல்லை! பிரசன்ன ரணதுங்க திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version